
குவாஹாட்டி விமான நிலையத்தின் சர்வதேச முனையம் இந்தாண்டு நவம்பரில் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகளைப் புதன்கிழமை இரவு பூட்டானில் இருந்து வந்த ஒரு குழுவுடன் ஹிமந்தா சர்மா மறு ஆய்வு செய்தார். இந்த முனையமானது வரும் நவம்பர் மாதம் பயணிகள் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது. மேலும் இந்த அதிநவீன உள்கட்டமைப்பைத் திறந்துவைக்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும்.
கெலேஃபு மைண்ட்ஃபுல் நகரத்தைச் சேர்ந்த பூட்டான் தூதுக் குழுவும் புதிய முனையக் கட்டடத்திற்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தது, இது அண்டை நாட்டுடனான இணைப்பை மேம்படுத்த உதவும்.
இது வடகிழக்கில் இணைப்பை அதிகரிக்கும் மற்றும் நமது அண்டை நாடான பூட்டானுடனான இணைப்பையும் மேம்படுத்தும் என்று அவர் கூறினார்
நவம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கும் முனையத்தில் பறக்கத் தயாராகுங்கள் என்று முதல்வர் எக்ஸ் பதிவில் பதிவிட்டார்.
பாதசாரிகள் பாதுகாப்பான சாலை கடக்க வசதியாக குவாஹாட்டியில் உள்ள கானாபரா, ஜலுக்பாரி இடையே ஐந்து கூடுதல் நடைமேம்பாலம் கட்டப்படும் என்றும் சர்மா அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.