
தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும், அதற்கான ஆதாரங்களையும் இன்று வெளியிட்டார்.
இதனிடையே, கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் சுமார் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்ததாக ராகுல் குற்றம் சாட்டிய நிலையில், கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகுலிடம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில், ராகுலின் குற்றச்சாட்டு அறிக்கைகள் தவறானவை என்று தேர்தல் ஆணையம் கூறி, இந்திய குடிமக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.