
ஜம்மு - காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு வீரர்கள் பலியாகியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர், உதம்பூர் மாவட்டத்தின் கட்வாவில் இருந்து பசந்த் கர் நோக்கி 187 வது பட்டாலியனைச் சேர்ந்த 18 வீரர்களுடன் வாகனம் சென்றுகொண்டிருந்தது.
காலை 10.30 மணியளவில் பசந்த்கர் பகுதியில் காண்ட்வா அருகே வாகனம் சென்றுகொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இரண்டு வீரர்கள் பலியான நிலையில், 16 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.