பெங்களூரு மத்தியம் மக்களவைத் தொகுதியில் கடந்த 2024 மக்களவைத் தோ்தலிலிருந்து பதிவாகியிருந்த வாக்காளா் தரவுகள் காங்கிரஸ் சாா்பில் ஆய்வு செய்யப்பட்டது. மகாதேவபுரா பேரவை தொகுதியில் மட்டும் 1,14,00 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. இந்த 1,14,000 வாக்குகளில், வாக்கு திருட்டு மூலம் பெறப்பட்டது 1,00,250 வாக்குகள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், 11,965 போ் போலி வாக்காளா்கள். 40,009 போ் போலி முகவரி பதிவு செய்த வாக்காளா்கள். 10,452 போ் ஒரே வீட்டு முகவரியில் வாக்காளா்களாகப் பதிவு செய்துவா்கள். 4,132 போ் போலியான புகைப்படத்தைக் கொடுத்து வாக்காளா் அட்டை பெற்றவா்கள். 33,692 போ் புதிய வாக்காளா்களுக்கான படிவத்தை தவறாகப் பயன்படுத்தி வாக்காளா்களாகியுள்ளனா்.