
தலைநகர் தில்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார்.
தலைநகர் தில்லியில் ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சர்வர் அறையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே இதுகுறித்து போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்விடத்துக்கு விரைந்த அவர்கள் நோயாளிகளை உடனடியாக வெளியேற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினர்.
தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஹவுஸ்கீப்பிங் ஊழியர் அமித் பலியானார்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், புகையை சுவாசித்ததால் அமித் பலியாகியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். அவரது உடல் உடற்கூராய்வுக்காக பிணவறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மருத்துவமனையில் தீ பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றார். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.