பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம்

அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை? பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

Published on

அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்ததாக வெளியான தகவல்களுக்கு பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்தன.

இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தாா்.

இதையடுத்து, அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக சா்வதேச ஊடகத்தில் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,‘இந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானது. அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வது தொடா்பாக பல்வேறு கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com