
பிகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா, இருவேறு வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜய்குமாரின் பெயர், லகிஷராய் தொகுதி மற்றும் பங்கிபூர் தொகுதி என இரு இடங்களிலும், 57 வயதில் ஒரு அட்டையும் 60 வயதில் ஒரு அட்டையும் என வெவ்வேறு அடையாள எண்களுடன் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுடன் தேஜஸ்வி யாத் பேசுகையில், பிகார் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட பிறகும் இவ்வாறு நடந்துள்ளது. இதற்கு விஜய்குமார் பொறுபேற்க வேண்டுமா? அல்லது தேர்தல் ஆணையமா? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது?இதன்பிறகு அவர் எப்போது ராஜிநாமா செய்வா? என்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பதிலளித்த விஜய்குமார், தன்னுடைய பெயர் முன்னதாக பங்கிபூர் தொகுதியில் மட்டுமே இருந்ததாகவும், தற்போது லகிஷராய் தொகுதியில் பெயர்சேர்க்க விண்ணப்பித்ததுடன், பங்கிபூரில் பெயர்நீக்கவும் விண்ணப்பித்ததாகத் தெரிவித்தார். மேலும், பெயர்நீக்க விண்ணப்பத்தின் ரசீது இருப்பதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.