நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஃபட்னவீஸ் நன்றி

நாக்பூர்-புணே இடையே வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நன்றி தெரிவித்தார்.
Urban Naxals using foreign funds
முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்
Published on
Updated on
1 min read

நாக்பூர்-புணே இடையே வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயில் இன்று தொடங்கப்பட்டுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயிலைத் தொடங்குமாறு ரயில்வே அமைச்சரிடம் நாங்கள் முன்பு கோரிக்கை விடுத்தோம்.

அவர் இந்தக் கோரிக்கை குறித்து நேர்மறையான முடிவை எங்களுக்கு உறுதியளித்திருந்தார். மேலும், பிரதமர் மோடியின் ஆசீர்வாதத்தால், அந்த முடிவு இன்று நிறைவேறியுள்ளது. இந்த ரயிலைத் தொடங்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தியாவில் உள்ள மற்ற வந்தே பாரத் ரயில்களைவிட இது மிக நீண்ட தூர ரயிலாக இருக்கும்.

இந்த ரயில் 12 மணி நேரத்தில் 881 கிமீ தூரத்தை கடக்கும். அனைத்து முக்கிய நிலையங்களிலும் நிறுத்தங்கள் இருக்கும். இது புணேவுடன் விதர்பா மற்றும் வடக்கு மகாராஷ்டிரத்தை இணைக்கும் இணைப்பை பெரிய அளவில் அதிகரிக்கும் என்றார்.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

பெங்களூருவின் கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸை மோடி நேரில் கொடியசைத்து தொடங்கி வைத்த அதேசமயத்தில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா–அமிர்தசரஸ், மற்றும் அஜ்னி (நாக்பூர்)–புணே வந்தே பாரத் சேவைகள் காணொளி வாயிலாக தொடங்கப்பட்டன.

Summary

Maharashtra Chief Minister Devendra Fadnavis on Sunday thanked Prime Minister Narendra Modi for launching the Nagpur-Pune Vande Bharat train, saying it will increase the connectivity of Vidarbha with Pune.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com