
ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 10) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், அதற்கான ஆவணச் சான்றுகள் ஏதேனும் இருப்பின் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சில தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்ட ஆவணங்களைக் காட்டி பேசியிருந்தார் மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அப்போது கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.
கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும் பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக சில ‘ஆதாரங்களையும்’ வெளியிட்டாா்.
இந்த நிலையில், கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் இதுகுறித்து ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ள அறிவிப்பாணையில் தெரிவித்திருப்பதாவது: “வாக்குச்சாவடி அதிகாரி வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு குறிப்பிட்ட பெண் வாக்காளர் இருமுறை தேர்தலில் வாக்குப்பதிவு செய்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
ஆனால் விசாரணையில், அந்த வாக்காளர் தான் ஒரேயொருமுறையே வாக்குப்பதிவு செய்ததாக கூறியுள்ளார்.
ராகுல் காந்தி காட்டிய ஆவணங்கள் மேற்கண்ட தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்பது தேர்தல் ஆணைய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆகவே, மேற்கண்ட ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தால் இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியுமென்று கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிக்க: டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.