ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? -பிரதமர் மோடி சொன்ன விஷயம்

ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியானது “புதிய இந்தியாவை” உலகுக்கு காட்டியுள்ளது...
பெங்களூரில் மோடி
பெங்களூரில் மோடிANI
Published on
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கான அடிக்கல்லை இன்று(ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் ஆரஞ்சு லைன் என்றழைக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்துக்கு ரூ. 15,600 கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி: “ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் பெங்களூருக்கு முதல்முறையாக வருகை தந்திருக்கிறேன். ஆபரேஷன் சிந்தூரில் இந்திய படைகள் வெற்றி வாகைச்சூட, பாதுகாப்பு துறையில் நம் நாட்டின் தொழில்நுட்ப ஆதிக்க திறனாலும் ‘மேக் இன் இந்தியா(உள்நாட்டு தயாரிப்பு)’ முன்னெடுப்பின் வலிமையாலும் கிட்டியது.”

“ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியானது “புதிய இந்தியாவை” உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது. பயங்கரவாதிகளை பாதுகாக்க வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்திலேயே மண்டியிடச் செய்ய வலுக்கட்டாயப்படுத்திய இந்தியாவின் வலிமையை வலியுறுத்தியிருகிறது இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்.

இந்த ஆபரேஷன் வெற்றிக்கு பெங்களூரும் கர்நாடகமும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்களிப்பை வழங்கியுள்ளது. இதற்கு பெங்களூரு மற்றும் கர்நாடக இளையோரின் பங்களிப்பு அதிகம். உலகளாவிய தொழில்நுட்ப வரைபடத்தில் இந்தியாவை பெங்களூரு இடம்பிடிக்கச் செய்துள்ளது. அவர்களின் பங்களிப்பை இத்தருணத்தில் பாராட்டுகிறேன்” என்றார்.

Summary

Modi added that the success of India’s forces in Operation Sindhoor was due to India’s technological prowess in defence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com