
அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை மனைவி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜக்தீஷ்பூர் பகுதியில் ஃபசன்கஞ்ச் கச்னாவ் கிராமத்தில் வசிப்பவர் அன்சார் அகமது (38). இவருக்கும் இரண்டாவது மனைவி நஸ்னீன் பானோவுக்கும் இடையே சனிக்கிழமை இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நஸ்னீன், கத்தியால் தனது கணவரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.
பலத்த காயமடைந்த அகமது, ஜக்தீஷ்பூரில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக ரேபரேலியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நஸ்னீன் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக ஜெக்தீஷ்பூர் போலீஸ் அதிகாரி ராகவேந்திர தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அகமதுக்கு சபேஜூல் மற்றும் நஸ்னீன் பானோ என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இதுதொடர்பாக வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக போலீஸார் கூறினர். இச்சம்பவம் அமேதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.