
கர்நாடகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) ஏய்ப்பு செய்யப்படுவது 5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் 2024-25 நிதியாண்டில், ரூ. 39,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக மொத்தம் 1,254 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
2024-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ஆம் நிதியாண்டில் வரி ஏய்ப்பு 5 மடங்குக்கும் மேல் அதிகம். 2023-24 நிதியாண்டில் ரூ. 7,202 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது. மொத்தம் 925 வழக்குகள் பதிவாகியுள்ளன.
2022-23 நிதியாண்டில் ரூ. 25,839 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை மக்களவையில் எழுப்பப்பட்டதொரு கேள்விக்கு அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.