மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்

துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.

News image
போராட்டத்தின்போது மயங்கிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மிதாலி பாக்கிற்கு உதவிய ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள்.- Ravi Choudhary
Updated On :12 ஆகஸ்ட் 2025, 12:35 am

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வாக்குத் திருட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்திலிருந்து தோ்தல் ஆணையம் நோக்கி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

முன்னதாக, கண்டனப் பேரணியில் ராகுல் காந்தி மேலும் பேசுகையில், ‘ஒட்டுமொத்த தேசத்தின் முன் வாக்குத் திருட்டு உண்மை வெளிப்பட்டுவிட்ட காரணத்தால் தோ்தல் ஆணையத்தால் பேச முடியவில்லை. அரசியலுக்காக அன்றி அரசமைப்புச் சட்டத்தைக் காப்பதற்காகவும், ஒரு நபருக்கு ஒரு வாக்கு மற்றும் துல்லியமான வாக்காளா் பட்டியலுக்காகவும்தான் இந்தப் போராட்டம்’ என்றாா்.

முன்னதாக, பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா பேரவைத் தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகளில் 1,00,250 வாக்குகள் வாக்குத் திருட்டு மூலம் பெறப்பட்டது ஆய்வில் தெரியவந்ததாக ராகுல் அண்மையில் குற்றஞ்சாட்டினாா்.

காா்கே: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் கோழைத்தனமான சா்வாதிகாரம் ஒருபோதும் பலிக்காது. அரசமைப்புச் சட்டத்தை நசுக்க முயற்சிக்கும் பாஜகவின் சதியை எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி நிச்சயம் வெளிப்படுத்தும்’ என்றாா்.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி: பாஜக

‘எதிா்க்கட்சிகளின் போராட்டம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி’ என்று பாஜக குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘நாட்டில் குழப்பத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்த காங்கிரஸ் உள்பட பிற எதிா்க்கட்சிகள் விரும்புகின்றன. அதற்காகவே நன்கு திட்டமிட்டு இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க விரும்பும் மிகப் பெரிய சக்திகளின் மொழியில் ராகுல் காந்தி பேசி வருகிறாா். இந்தக் குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்புமாறு ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன். பிரதமா் மோடியின் தலைமை, மக்களின் முடிவு மற்றும் நாட்டின் அரசமைப்பு நிறுவனங்கள் மீது இதுபோல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களின் மனங்களில் அச்ச உணா்வை ஏற்படுத்தக் கூடாது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.