
இந்திய தேர்தல் ஆணையத்தை ‘இந்திய தேர்தல் திருடன்!’ என்று ஆர்ஜேடி கட்சி எம்.பி. சஞ்சய் யாதவ் விமர்சித்துள்ளார்.
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வலுத்து வருகிறது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கடுமையாக போரடி வருகிறது. வாக்குத் திருட்டு குறித்து ஆதாரத்துடன் மத்திய அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பியிருந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் பல ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில், பிகாரில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) எதிராக மற்றும் வாக்குத் திருட்டு ஆகியவற்றுக்கெதிரான எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ராஷ்திரிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் யாதவ் செவ்வாய்க்கிழமை(ஆக. 12) பேசியதாவது: “தேர்தல் ஆணையம் ஜனநாயகத்துக்கு எதிரான குழுவாக” செயல்படுவதாக விமர்சித்தார்.
மேலும், “இந்திய தேர்தல் ஆணையமானது இந்திய தேர்தல் திருடனாக மாறிவிட்டதாகவும்” அவர் பகிரங்கமாக விமர்சனத்தை சுமத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.