
மாநிலங்களவையில் புதிய வருமான வரி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த திங்கள்கிழமை இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்துவிட்டன. எனவே புதிய சட்டம் தேவைப்படுகிறது.
இந்த மசோதாவில் புதிய வருமான வரி விகிதங்கள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. புதிய வருமான வரிச் சட்டத்தில் வாா்த்தைகள் எளிமையாக இருக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது’ என்றாா்.
அவையில் இருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.