
தில்லியில் தெருநாய்களை அகற்றும் விவகாரத்தில் மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க உச்சநீதிமன்றம் நேற்று(திங்கள்கிழமை) உத்தரவிட்டது.
இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் விதத்தில் நடந்துகொள்ளும் மக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் அல்லது அமைப்புகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,
"தில்லி நகரத்தின் அனைத்து தெருநாய்களையும் ஒரு சில வாரங்களுக்குள் காப்பகங்களுக்கு மாற்றுவது அவற்றை கொடூரமாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு வழிவகுக்கும். அவற்றை வைத்திருக்க போதுமான காப்பகங்கள்கூட இங்கு இல்லை.
நகர்ப்புறச் சூழலில் உள்ள விலங்குகள் மோசமான சிகிச்சை மற்றும் மிருகத்தனத்திற்கு ஆளாகின்றன. நிச்சயமாக இந்த சூழ்நிலையை நிர்வகிக்க ஒரு சிறந்த வழி இருக்கலாம்.
இந்த அப்பாவி விலங்குகளைப் பாதுகாப்பாக கவனிக்க ஒரு சிறந்த மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும்.
நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினங்கள். அவைகள் இப்படியான கொடுமைக்கு ஆளாகக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | வாயில்லா ஜீவன்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல! ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.