தில்லி செங்கோட்டை அருகே பிடிபட்ட 700 தெருநாய்கள்!

தில்லி செங்கோட்டை அருகே 700 தெருநாய்கள் பிடிபட்டுள்ளன.
தெரு நாய்கள்
தெரு நாய்கள்
Published on
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தும் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டும் புது தில்லியில் செங்கோட்டை அருகே சுற்றித் திரிந்த 700 தெரு நாய்கள் பிடிபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்களை பிடிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், தில்லி மாநகராட்சியின் விலங்குகள் பிரிவு, துரிதமாக செயல்பட்டு தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடித்துள்ளது.

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த மற்றும் நோய் பீடித்திருந்த நாய்களை, மாநகராட்சியின் விலங்குகள் பிரிவு ஊழியர்கள் பிடித்துச் சென்றுள்ளனர்.

தங்களது நாய் பிடிக்கும் வாகனங்கள் செங்கோட்டை பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கிருந்து 700 நாய்கள் பிடித்து வரப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டைப் பகுதியில் முதற்கட்டமாக நாய்கள் பிடிபட்டுள்ளன. இதர பகுதிகளில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப் பிறகு பிடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தில்லி மற்றும் தேசிய தலைநகா் என்சிஆா் பகுதிகளில் அனைத்து தெரு நாய்களையும் அகற்றி காப்பகங்களில் பராமரிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

தில்லியில் தெரு நாய்கள் கடிப்பதால் ரேபீஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடா்பாக, உச்சநீதிமன்றம் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

700 stray dogs have been caught near Delhi's Red Fort.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com