
பெங்களுர் போக்குவரத்து நெரிசல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐந்து வயது சிறுமியின் இந்தக் கடிதம் பெங்களூரில் போக்குவரத்துப் பிரச்னையை ஒருவர் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அழகான முறையில் தீர்வு காணக் கோருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த அபிரூப் சட்டர்ஜி, தனது ஐந்து வயது மகள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த கடிதத்தில் சிறுமி எழுதியிருப்பதாவது,
"நரேந்திர மோடி ஜி" போக்குவரத்து நெரிசல் அதிகம். நாங்கள் பள்ளிக்குச் செல்ல தாமதம் ஆகிறது. அதுபோல் வேலைக்குச் செல்வோரும் சிரமப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. தயது செய்து உதவுங்கள் இவ்வாறு சிறுமி கூறியுள்ளார்.
இந்த கடிதத்தைப் பார்த்த பலரும் சிறுமியைப் பாராட்டி வருகின்றனர். அதோடு தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை லைக் போட்டுள்ளனர்.
சிறுமியின் கடிதத்தைப் பார்த்து பிரதமர் மோடி அலுவலக எக்ஸ் தள கணக்கும் லைக் செய்துள்ளது. இதுவரை இந்த கடிதத்தை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
அதில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவில் விஷயங்கள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன என்பதைக் குழந்தைகளுக்கு விளக்குவது மிகவும் கடினமான பகுதியாகும். சில சமயங்களில் நான் ஒரு பெற்றோராகத் தோல்வியடைந்துவிட்டேனா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
மற்றொருவர், பிரதமர் மோடி விரைவில் உங்கள் மகளைச் சந்திப்பார். அவளுடைய ஆசை நிறைவேறும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலர் சிறுமியின் செயலை பாராட்டுவதாகக் கூறியுள்ளனர்.
மற்றொரு பயனர், “நம்பிக்கை ஒரு நல்ல விஷயம். ஆனால் நல்லாட்சிக்கான நம்பிக்கையை வைத்திருப்பது உங்கள் கையில் மணலை வைத்திருப்பது போன்றது. பாஜக, காங்கிரஸுக்கு நன்றி என்று எழுதியுள்ளார்.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் கூடுதலாக மெட்ரோ, மேம்பாலங்கள் உள்ளிட்டவை மேற்கொண்டு வந்தாலும் பெங்களூர் போக்குவரத்து நெரிலுக்கு இதுவரை தீர்வுகாணப்படவில்லை என்றே சொல்லலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.