பருந்துப் பார்வையில்... மனதை மயக்கும் பெங்களூர் மெட்ரோ!

பெங்களூர் மெட்ரோ மஞ்சள்-பச்சை வழித்தடங்கள் பருந்துப் பார்வையில் எடுக்கப்பட்ட விடியோ வைரல்.
பெங்களூர் மெட்ரோ
பெங்களூர் மெட்ரோ
Updated on
1 min read

பெங்களூர் மெட்ரோ ரயிலின் மஞ்சள் வழித்தடத்தில் இரு ரயில்களும், பச்சை வழித்தடத்தில் ஒரே நேரத்தில் இரு ரயில்களும் கடந்து செல்லும் பருந்துப் பார்வை விடியோ வைரலாகி வருகிறது.

ஒரே பார்வையில் நான்கு ரயில்கள் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் அந்த விடியோ டிரோன் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ரயில் மேம்பாலங்களும் ஒன்றன் கீழ் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் அதிசயமாக, ஒரே நேரத்தில் இரண்டு ரயில் வழித்தடத்திலும், எதிரெதிர் செல்லும் ரயில்களும் கடந்துசென்றது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆர்வி சாலை அருகே, இரு மேம்பாலங்களும் ஒன்றை ஒன்று கடந்து செல்லும்போது, மிக அபூர்வமாக நான்கு வழித்தடங்களிலும் ரயில்களும் வந்து, அதுவும் அந்த காட்சியில் நான்கு ரயில்களும் ஒன்றாக கடந்து செல்வது நிச்சயம் அதிசயமான நிகழ்வாகவே இருக்கலாம். அல்லது நாள்தோறும் நடக்கும் அதிசயமாகவும் இருக்கலாம். ஆனால், இந்த காட்சிக்காக தான் பல நாள்கள் காத்திருந்ததாக, விடியோ எடுத்தவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீஹரி கரந்த் என்பவர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்த விடியோவை பகிர்ந்த நிலையில், இது வைரலாகி விட்டது. அந்த விடியோவுடன், இந்த சிறந்த விடியோவுக்காக பல நாள்கள் காத்திருந்தேன், பச்சை - மஞ்சள் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் நான்கு ரயில்கள் வெவ்வேறு திசையில் பயணிக்கும் விடியோ கிடைத்தது என்று பதிவிட்டுள்ளார்.

video courtesy Srihari KaranthX post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com