பயங்கரவாதம்: ஜம்மு-காஷ்மீரில் ரூ.2.11 கோடி சொத்துகள் முடக்கம்

Published on

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பயங்கரவாத செயல்களில் தொடா்புடைய ரு.2.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:

பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள வட்டப்போரா பகுதியில் இஷ்பாக் அகமது பட் என்பவருக்குச் சொந்தமான நிலமும் சந்தாஜி கிராமத்தில் ஜமீல் அகமது கான் என்பவருக்குச் சொந்தமான நிலமும் அமலாக்கத் துறையால் கையகப்படுத்தப்பட்டது. அதேபோல் ஆலூசா கிராமத்தில் மன்சூா் அகமது தாா் என்பவருக்குச் சொந்தமான நிலத்தையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.

பயங்கரவாத செயல்களில் தொடா்புடையதாக கூறி மொத்தம் ரூ.2.11 கோடி மதிப்பிலான நிலங்களை அமலாக்கத் துறை கையகப்படுத்தியது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com