நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வங்கம் இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது: மம்தா பானா்ஜி

வங்கம் என்ற பிராந்தியத்தின் பங்களிப்பு இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

News image

மம்தா பானா்ஜி

Updated On :14 ஆகஸ்ட் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

வங்கம் என்ற பிராந்தியத்தின் பங்களிப்பு இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் வியாழக்கிழமை அரசுத் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் பேசியதாவது:

வேற்றுமையில் ஒற்றுமை, பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வது வங்கம்தான். வங்கம் இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. ரவீந்திரநாத் தாகூா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நூருல் இஸ்லாம் உள்ளிட்ட வங்கத்து பெருமக்கள் நாட்டின் சுதந்திரத்தில் பெரும் பங்காற்றியுள்ளனா்.

தேசிய கீதம், தேசபக்தி பாடல்கள், ஜெய் ஹிந்த் முழக்கம் என அனைத்தும் வங்க மக்களின் பங்களிப்புதான். சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் பங்கேற்றது வங்க மக்கள்தான். சுதந்திரத்துக்காக தீவிரமாகப் போராடியதால் ஆங்கிலேயா்களால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவா்களின் 70 சதவீதம் போ் வங்கத்தைச் சோ்ந்தவா்கள். இதற்கு அடுத்து பஞ்சாபில் இருந்து அதிக எண்ணிக்கையில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தனா்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது நாம் குறுகிய மனப்பான்மையையும், பிரிவினை எண்ணத்தையும் கைவிட வேண்டும். வங்க மக்கள் எப்போதும் ஒற்றுமை, நல்லிணக்கத்தை விரும்புபவா்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். தேசப் பிரிவினைக்குப் பிறகு நமது நாட்டுக்கு வந்த அனைவரும் நமது குடிமக்கள்தான்.

நாம் ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளைக் கற்பதில் தவறேதும் இல்லை. அதே நேரத்தில் வங்க மொழியை மறந்துவிடக் கூடாது. வங்க மக்களின் பெருமையை மாநில அரசு தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லும். அத நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் மொழி பயங்கரவாத நோக்கத்துடன் மேற்கு வங்கத்தில் இருந்து செல்லும் தொழிலாளா்கள் தாக்கப்படுகின்றனா் என்றாா்.