
ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370 -ஆவது பிரிவு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
பின்னர் இதுதொடர்பான வழக்கில் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 2024ல் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டு ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி, ஆட்சி நடத்தி வருகிறது. எனினும் இன்னும் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று மாநில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அமர்வு, 'சமீபத்திய பஹல்காம் தாக்குதல் போன்ற நிகழ்வுகளை புறக்கணிக்க முடியாது என்றும் கள எதார்த்தத்தை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் கூறி இந்த விவகாரத்தில் 8 வாரத்துக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.