நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் உடல்நலக் குறைவால் இன்று(ஆக.15) காலமானார். அவருக்கு வயது 80.
பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.23 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவர்கள் அறிவித்தனர்.
இல.கணேசனின் மறைவுக்கு பாஜக தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக இருந்த நிலையில், நாகாலாந்து ஆளுநராக பணியாற்றி வந்தார்.
இல.கணேசன் கடந்து வந்த பாதை!
தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி பிறந்தவர். இவர் பாஜகவில் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஆர்எஸ்எஸ்ஸில் இருந்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை.
சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்து வந்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும் தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேரப் பணியாளராக இருந்து வந்தார்.
பின்னர், பாஜகவின் தேசியச் செயலராகவும், தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றியவர். பின்னர் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991 ஆம் ஆண்டில் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரான நிலையில், 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இருப்பினும், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
2021 ஆம் ஆண்டில் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் மணிப்பூர் மாநிலத்தின் 17-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Nagaland Governor L. Ganesan passes away!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

நாகாலாந்தின் புதிய ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்பு!

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார் கேரள ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர்!

தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


