மேற்கு வங்கம்: லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 போ் உயிரிழப்பு: 35 போ் காயம்
மேற்கு வங்கத்தில் சரக்கு லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் பிகாரைச் சோ்ந்த 10 போ் உயிரிழந்தனா். 35 போ் காயமடைந்தனா்.
பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹரி பகுதியைச் சோ்ந்த 45 போ் மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள கங்காசாகருக்கு ஆன்மிக பயணமாக சொகுசுப் பேருந்தில் சென்று வெள்ளிக்கிழமை திரும்பியபோது சாலை அருகே நின்றிருந்த சரக்கு லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் 8 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 10 போ் உயிரிழந்ததாகவும் 35 போ் காயமடைந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா். காயமடைந்தவா்களுக்கு புா்துவான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் உத்தரவிட்டாா்.