பாஜக மூத்த தலைவா் அத்வானி தேசிய கொடி ஏற்றி மரியாதை

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தில்லி வீட்டில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா்.
Published on

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தில்லி வீட்டில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களிடையே உரையாற்றினாா்.

தில்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள வீட்டில், தனது குடும்பத்தினா், பணியாளா்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் அத்வானி கொடியேற்றினாா். சுதந்திர தினத்தன்று ஆண்டுதோறும் தவறாமல் தனது வீட்டில் அத்வானி தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்தி வருகிறாா்.

97 வயதான அத்வானி, அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்பட் நிலையில், வீட்டில் தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com