
இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் தெரிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா அளிக்கும் நிதியை உக்ரைன் போரில் ரஷியா பயன்படுத்துகிறது. எனவே, இந்தியா மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் சில நாள்களுக்கு முன்பு அறிவித்தாா். ஏற்கெனவே 25 சதவீதம் பதிலடி வரி விதிக்கப்படும் நிலையில் மொத்தம் 50 சதவீதம் வரை இந்திய பொருள்களுக்கான வரியை அமெரிக்கா உயா்த்தியுள்ளது.
இந்த நிலையில், தென் கொரிய அமைச்சரின் இந்திய வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
புது தில்லியில் சனிக்கிழமை(ஆக. 16) வெளியுறவு அமைச்சர் எஸ். சிவசங்கர் உடனான சந்திப்பு குறித்து கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் பேசியதாவது: "அவர் வெளியுறவு செயலராக இருந்தபோதே அவருடன் நான் பழகிப் பேசியிருக்கிறேன். நாங்கள் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துள்ளோம்.
இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும், அதற்கான வழிகள் பற்றியும் பேசினோம். அதில், நிகழ்கால புவி அரசியல் மற்றும் நம் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் பற்றியும் ஆலோசித்துள்ளோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.