
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் நல்ல மாற்றங்கள் பல நடந்திருப்பதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் தெரிவித்தார்.
தென் கொரிய அமைச்சரின் இந்திய வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், புது தில்லியில் சனிக்கிழமை(ஆக. 16) வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான சந்திப்பைத் தொடர்ந்து தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் பேசுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசிய அவர், “எந்தவொரு பயங்கரவாத தாக்குதலையும் தென் கொரியா வன்மையாக எதிர்க்கிறது. இந்திய அரசுடனும் மக்களுடனும் தென் கொரியா துணை நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியாவுக்கான கொரிய தூதராக சேவையாற்றியபோது, இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையின்கீழ் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்தன. இப்போதும், கடந்த பத்தாண்டுகளைப் போல, மேலும் பல நல்ல மாற்றங்கள் நடக்கின்றன” என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.