
தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை(ஆக. 17) நடைபெறுகிறது. இந்தத் தகவலை இன்று(ஆக. 16) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்நிலையில், பிகாா் வாக்களா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக எதிா்க்கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்ப்பதும், நீக்குவதும் தோ்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள்பட்டது’ என்று உச்ச நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குத் திருட்டு விவகாரம் பூதகரமாக வெடித்து சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், நாளை(ஆக. 17) பிகாரில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் இணைந்து, வாக்குரிமைப் பேரணியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மேற்கொள்கிறாா்.
இதனிடையே, அதே நாளில் மாலை 3 மணிக்கு புது தில்லியிலுள்ள தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Election Commission of India to hold a press conference at 3 PM, August 17, 2025, at the National Media Centre in New Delhi: DG Media ECI
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.