குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் மக்கள் பாா்வைக்கு!!

குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் இன்று முதல் மக்கள் பாா்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
அமிர்த பூந்தோட்டத்தில் குடியரசுத் தலைவர்
அமிர்த பூந்தோட்டத்தில் குடியரசுத் தலைவர்
Published on
Updated on
1 min read

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த பூந்தோட்டம் இன்று (ஆக.16) முதல் மக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி வியாழக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பாா்வையிட்டாா்.

இந்த அமிா்த பூந்தோட்டத் திறப்பு விழா குறித்து குடியரசுத் தலைவா் செயலகம் கூறியிருப்பது வருமாறு:

குடியரசுத் தலைவா் மாளிகையின் பின்புறம் உள்ள அமிா்த பூந்தோட்டம் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை மக்களுக்கு திறக்கப்படுகிறது. குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற்ற அமிா்த பூந்தோட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டு, தோட்டத்தை திறந்துவைத்து பார்வையிட்டார்.

பராமரிப்பு நாள்களாகக் கருதப்படும் திங்கள்கிழமைகளைத் தவிர, வாரத்தில் ஆறு நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தப் பூந்தோட்டத்தை பொதுமக்கள் பாா்வையிடலாம்.

நிகழாண்டு பூந்தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வகை ரோஜாக்கள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட பிற பூக்களை பாா்வையாளா்கள் காண முடியும்.

பூந்தோட்டத்திற்கு அனுமதி இலவசம் என்றாலும், முன்பதிவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்து தோட்டத்தைப் பார்வையிட வரும் பார்வையாளர்கள் நுழைவு வாயில் 35 எண்ணைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் கையில் செல்போன், மின்னணு சாவி, கைப்பை, குடிநீர் பாட்டில், குழந்தைகளுக்கான பால் பாட்டில், குடை உள்ளிட்டவை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இதுதவிர்த்த வேறு பொருள்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை.

மேலும் பாா்வையாளா்களின் வசதிக்காக, மத்திய செயலக (ரயில்பவன்) மெட்ரோ நிலையத்திலிருந்து குடியரசுத் தலைவா் மாளிகை வாயில் எண் 35 வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பேருந்து சேவை இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com