
ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் (வயது 78) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலையில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது, வயது மூப்பு சார்ந்த பிரச்னைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து பிஜு ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், வயது மூப்பு சார்ந்த பிரச்னைகளுக்காக நவீன் பட்நாயக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடன் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை வெளியிடும் எனக் குறிப்பிட்டார்.
ஒடிஸா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான நவீன் பட்நாயக்கிற்கு சனிக்கிழமை இரவு அசெளகரியம் ஏற்பட்டதால் அவரின் இல்லத்திற்கு மருத்துவர்கள் சிலர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு கழுத்துவடத்தில் ஏற்பட்ட பிரச்னைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன் பட்நாயக்கிற்கு, கடந்த ஜூன் 12ஆம் தேதி முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 22 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதையும் படிக்க | தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி தாய்க்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.