இந்தியா கூட்டணி கூட்டம்..(படம் | ஏஎன்ஐ)
இந்தியா
குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை?
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் குறித்து ‘இண்டி’ கூட்டணி தலைவா்கள் ஆலோசனை நடத்த வாய்ப்பு.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் குறித்து ‘இண்டி’ கூட்டணி தலைவா்கள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: புது தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அலுவலகத்தில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவா்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை 10.15 மணிக்கு நடைபெற உள்ளது.
அப்போது குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நிறுத்தப்படும் பொது வேட்பாளா் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தன.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் வேட்பாளராக அரசியலுடன் தொடா்பில்லாத பொது வேட்பாளா் களமிறக்கப்படுவாா் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.