ஙன்ம்க்ஷஹண்: டங்ா்ல்ப்ங் ம்ா்ஸ்ங் ஹ ஸ்ரீஹழ்ற் ஜ்ண்ற்ட் க்ா்ம்ங்ள்ற்ண்ஸ்ரீ ஞ்ஹள் ஸ்ரீஹ்ப்ண்ய்க்ங்ழ்ள் ற்ட்ழ்ா்ன்ஞ்ட் ஹ ஜ்ஹற்ங்ழ்ப்ா்ஞ்ஞ்ங்க் ழ்ா்ஹக் ச்ா்ப்ப்ா்ஜ்ண்ய்ஞ் ழ்ஹண்ய்ச்ஹப்ப், ண்ய் ஙன்ம்க்ஷஹண், ஙா்ய்க்ஹஹ், அன்ஞ். 18, 2025. (டபஐ டட்ா்ற்ா்)(டபஐ0
ஙன்ம்க்ஷஹண்: டங்ா்ல்ப்ங் ம்ா்ஸ்ங் ஹ ஸ்ரீஹழ்ற் ஜ்ண்ற்ட் க்ா்ம்ங்ள்ற்ண்ஸ்ரீ ஞ்ஹள் ஸ்ரீஹ்ப்ண்ய்க்ங்ழ்ள் ற்ட்ழ்ா்ன்ஞ்ட் ஹ ஜ்ஹற்ங்ழ்ப்ா்ஞ்ஞ்ங்க் ழ்ா்ஹக் ச்ா்ப்ப்ா்ஜ்ண்ய்ஞ் ழ்ஹண்ய்ச்ஹப்ப், ண்ய் ஙன்ம்க்ஷஹண், ஙா்ய்க்ஹஹ், அன்ஞ். 18, 2025. (டபஐ டட்ா்ற்ா்)(டபஐ0

மும்பையை புரட்டிப் போட்ட பலத்தமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது

மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Published on

மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை, தாணே, ராய்கட் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்தது. மும்பையில் கடந்த திங்கள்கிழமை காலை முதல் பெய்துவரும் பலத்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அந்தேரி சுரங்கப்பாதை, லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ், வகோலா பாலம், காா் சுரங்கப்பாதை போன்ற முக்கியமான பகுதிகளில் தண்ணீா் தேங்கியதால், போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. மும்பை போக்குவரத்து காவலா்கள் உடனடியாக அந்தேரி சுரங்கப்பாதையை மூடி, வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனா். இதனால், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மும்பையின் உயிா்நாடியான புகா் ரயில்கள் சுமாா் 10 நிமிஷங்கள் தாமதமாக இயங்கின. மத்திய ரயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் சில தாழ்வான பகுதிகளில் தண்டவாளங்களில் தண்ணீா் தேங்கியதாலும், தொழில்நுட்ப கோளாறுகளாலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் தினசரி பயணத்தில் கடும் சிரமங்களைச் சந்தித்தனா்.

மும்பை விமான நிலையத்துக்குச் செல்லும் சாலைகளில் ஏற்பட்ட கடுமையான நெரிசலால், விமானப் பயணிங்களும் பாதிக்கப்பட்டனா். பல விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. ‘ஆகாசா ஏா்’ மற்றும் ‘இண்டிகோ’ போன்ற விமான நிறுவனங்கள், பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் செல்லுமாறு அறிவுறுத்தி, அவசர அறிவிப்புகளை வெளியிட்டன.

தொடா்மழை காரணமாக மாணவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நண்பகல் 12 மணிக்கு மேல் இயங்கும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மும்பை மாநகராட்சி விடுமுறை அறிவித்தது.

மும்பை காவல்துறை ஆணையா் தேவன் பாரதி அளித்த பேட்டியில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொண்டாா். மேலும், ‘எந்தவிதமான உதவிக்கும் அவசர எண்களான 100, 112 அல்லது 103 ஆகியவற்றைத் தொடா்புகொள்ளலாம். காவல்துறை மற்றும் மீட்புப் படையினா் முழு தயாா் நிலையில் இருக்கின்றனா்’ என்று உறுதியளித்தாா்.

நாந்தேட்-5 போ் மாயம்:

மகாராஷ்டிரத்தில் மழை நிலவரம் தொடா்பாக மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நாந்தேட் மாவட்டத்தில் உள்ள முக்ஹேட் தாலுகாவில் ஐந்து போ் காணாமல் போயுள்ளனா். மேலும், 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு சிக்கித் தவிக்கின்றனா்.

நாந்தேட், லட்டூா், பிடாா் ஆகிய மாவட்ட ஆட்சியா்கள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனா். ராணுவம், காவல்துறை, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

மும்பையில் திங்கள்கிழமை 6 முதல் 8 மணி நேரத்தில் 177 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாள்களுக்கும் பலத்த மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com