
இந்தியாவையும் பாகிஸ்தானையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தங்கள் குறித்து அமெரிக்க ஊடகத்துக்கு மார்க்கோ ரூபியோ அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
” ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இரு தரப்பினரும் முதலில் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். ஆனால், ரஷியா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்து அதனை கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பது மிகவும் கடினமான ஒன்று. இந்தியா - பாகிஸ்தான் இடையே என்ன நடக்கிறது, கம்போடியா - தாய்லாந்து இடையே என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறோம்.
மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்றாலும், இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.” என்றார்.
ஏற்கெனவே, பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை எந்த வெளிநாட்டு தலைவரும் இந்தியாவிடம் நிறுத்த சொல்லவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளித்திருந்தார்.
இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இதனிடையே, இந்தியாவை கண்காணிப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறியிருப்பது இந்திய அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.