ராம்பனில் நிலச்சரிவு: ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்!

ராம்பன் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்..
ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திங்கள்கிழமை அதிகாலை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிராந்தியங்களுக்கு இடையேயான சாலைகளான முகல் மற்றும் சிந்தான் சாலைகளில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்குகிறது. பயணிகள் சாலைகளின் ஒழுங்கைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள், வாகனங்கள் முந்திச் செல்வதால் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராம்பன் உள்பட பல இடங்களில் கற்கள் உருண்டுள்ளதால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் பலத்த மழை பெய்து வருகிறது. எனவே, அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் போக்குவரத்து காவல் துறையின் அறிவுறுத்தல் தெரிவித்துள்ளது.

வானிலை சீரடைந்து சாலை சுத்தம் செய்யப்படும் வரை பயணிகள் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த மழையால் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சாரதா மாதா கோயில் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

நெடுஞ்சாலையில் உள்ள கற்களை அகற்றி, போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் ஆட்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

The Jammu-Srinagar national highway was shut for traffic early Monday after heavy rains triggered multiple landslides and shooting stones from hillocks overlooking the arterial road in Ramban district, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com