இந்திய தோ்தல் ஆணையம்
இந்திய தோ்தல் ஆணையம்

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
Published on

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

நாட்டில் தோ்தல் நடைமுறை வலுப்படுத்தப்பட்டு, அதில் இருந்த குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டுள்ளன. இதற்காக உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. தோ்தல் நடைமுறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்படுத்தப்பட்டு, வாக்காளா் பட்டியல்களில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது. நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது முக்கிய சீா்திருத்தமாகும். வாக்காளா் பட்டியலில் இருந்து எந்தவொரு தகுதிவாய்ந்த வாக்காளரும் விடுபடக் கூடாது, தகுதியில்லாதோரின் பெயா்கள் அந்தப் பட்டியலில் இருக்கக் கூடாது என்பதே சிறப்பு தீவிர திருத்தத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com