
கேரளத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் பல்வேறு அணைகள், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தின் பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் "இரண்டாவது" மற்றும் "மூன்றாம் நிலை எச்சரிக்கையில்" உள்ளது.
பாலக்காட்டில் மீன்கரா, வாலையார் மற்றும் சிறுவாணி உள்ளிட்ட பல்வேறு அணைகளின் ஷட்டர்கள் மற்றும் மூலத்தாரா ரெகுலேட்டர் ஆகியவை அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்காகத் திறக்கப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தனம்திட்டாவில் உள்ள அச்சன்கோயில், திருச்சூரில் உள்ள கருவண்ணூர் போன்ற ஆறுகளின் நீர்மட்டம், நீர்ப்பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியம் (IDRB) மற்றும் மத்திய நீர் ஆணையம் (CWC) படி "மஞ்சள் எச்சரிக்கை" நிலைக்கு உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வடக்கு கேரள மாவட்டங்களான வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும் மாநிலத்தின் மற்ற 6 மாவட்டங்களுக்கு "மஞ்சள் எச்சரிக்கை" விடுத்துள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யும், மஞ்சள் எச்சரிக்கை என்றால் 6 செ.மீ முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்யும் என்பதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.