குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனு தாக்கல்!

சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்.
சி.பி. ராதாகிருஷ்ணன்
சி.பி. ராதாகிருஷ்ணன் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்துவந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தோ்வு செய்யப்பட்ட நிலையில், அவர், நாளை(ஆக. 20) வேட்பு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னதாக, சி.பி.ராதாகிருஷ்ணன் தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கர் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 2027, ஆக. 10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.

உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதியின்கீழ், அடுத்த குடியரசு துணைத் தலைவர் தோ்தலுக்கான அறிவிக்கையை ஆகஸ்ட் 7-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஆகஸ்ட் 25-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை(ஆக. 20) வேட்பு மனு தாக்கல் செய்ய நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் செப்டம்பா் 9-ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே தோ்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. இந்த தோ்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

C.P. Radhakrishnan is reported to be filing his nomination tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com