
ஒடிசா மாநிலத்தில், ”அக்னி - 5” பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் சந்திப்பூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ஐடிஆர்), இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி - 5 சோதனை இன்று (ஆக.20) வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை, சந்திப்பூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தச் சோதனையின் மூலம், அக்னி - 5 ஏவுகணையின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அளவுகள் சரிபார்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.