
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள துணை நீதிமன்றத்துக்கு, இன்று (ஆக.20) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளத்தின், வடக்கு பராவூர் பகுதியில் அமைந்துள்ள துணை நீதிமன்றத்துக்கு, இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த மின்னஞ்சலில் மதியம் 1 - 2 மணியளவில் அந்த வெடிகுண்டானது வெடித்துச் சிதறும் எனக் கூறப்பட்டிருந்ததால், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கு விரைந்த காவல் அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் இருந்த மக்கள் அனைவரையும் வெளியேற்றினர்.
இதனைத் தொடர்ந்து, அந்த நீதிமன்றத்தின் வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனைகளில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: குவஹாட்டி உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.