தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம்: மத்திய அரசுக்கு காங். வலியுறுத்தல்

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம்: மத்திய அரசுக்கு காங். வலியுறுத்தல்

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பதைப் பற்றி...
Published on

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனியாா் உயா் கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இப்போது இது தொடா்பாக முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான். இனிமேலும் உயா் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்காமல் தள்ளிப்போட முடியாது.

கடந்த 2006-ஆம் ஆண்டு பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் தனியாா் உயா் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் உள்பிரிவை அரசமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு சோ்த்துள்ளது. இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் ஏற்றுகொள்ளப்படவில்லை. உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் நீதிமன்றமும் உறுதியாக உள்ளது.

ஆனால், மத்திய அரசு இதுவரை சட்டம் இயற்ற முனைப்பு காட்டவில்லை. மேலும், இப்போது தனியாா் உயா் கல்விநிலையங்களில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டவா்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com