
உத்தரப் பிரதேசத்திலுள்ள ஜலாலாபாத் என்ற ஊரின் பெயர் பரசுராம்புரி என இன்று (ஆக. 20) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெயரை மாற்ற வலியுறுத்தி, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் கடிதத்தில், ஜலாலாபாத்தின் பெயரை பரசுராம்புரி என மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள ஜலாலாபாத் பகுதியானது தெய்வீக துறவி பரசுராம் பிறப்பிடமாகக் கருதப்படுவதாகவும், அங்கு பரசுராமுக்கு கோயில் இருப்பதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஊரின் பெயரை மாற்றக் கோரி ஜலாலாபாத் நகராட்சி நிர்வாகமும் முன்மொழிந்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என உள் துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜலாலாபாத் என்ற ஊரின் பெயர் பரசுராம்புரி என மாற்றப்பட்டுள்ளது.
ஜலாலாபாத் நகராட்சியை உள்ளடக்கிய ஷாஜஹான்பூர் தொகுதி எம்.பி., ஜிதின் பிரசாடா, ''ஜலாலாபாத் ஊரின் பெயரை பரசுராம்புரி என மாற்ற ஒப்புதல் அளித்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி'' தெரிவித்துக்கொள்வதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பின்னோக்கிச் செல்கிறது இந்தியா: ராகுல் விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.