
அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் இந்தியாவில் சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புணே, நொய்டா, கொல்கத்தா ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு 28,824 பேரை புதிதாக பணியில் சேர்த்துள்ளது.
இந்த நிறுவனம் சமீபத்தில் ஓப்பன்ஏஐ(OpenAI) உடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் உயர்நிலை ஆலோசனை நடத்தியது.
இதன்பின்னரே இந்தியாவில் சுமார் 10%, சுமார் 3,000 ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்துள்ளது.
மென்பொருள் மேம்பாடு, கிளவுட் சேவைகள், வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களை இந்த பணி நீக்கம் கடுமையாக பாதித்துள்ளது.
செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானால் ஐடி துறையில் பணி நீக்கங்கள் தொடர்ந்து வருகின்றன.
இதையும் படிக்க | கால் லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 125?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.