முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! சசி தரூர் ஆதரவு?

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆதரவு
சசி தரூர்
சசி தரூர்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு குறித்த மசோதாவை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, கொடூரமான மசோதா என்று விமர்சித்த நிலையில், மசோதாவுக்கு காங்கிரஸின் மற்றொரு எம்.பி. சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், நீங்கள் 30 நாள்கள் சிறையில் வைக்கப்பட்டால், அமைச்சராக தொடர முடியுமா? இது பொதுஅறிவு சார்ந்த ஒன்று. இதில் தவறாக எதுவும் தெரியவில்லை.

இந்த மசோதாவை ஆய்வுக்கு அனுப்புவது நல்ல விஷயம்தான். குழுவுக்குள் விவாதம் நடத்துவதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது என்று நினைக்கிறேன். ஆகையால், விவாதத்தை நடத்துவோம் என்று தெரிவித்தார்.

மக்களவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 மசோதாக்களை முன்மொழிந்தார். அவற்றில் முதல்வர்கள், அமைச்சர்கள் அல்லது பிரதமரோ 30 நாள்களுக்கு காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற மசோதாவும் அடங்கும்.

ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, மசோதாவின் நகல்களைக் கிழித்து, அவற்றை அமித் ஷாவின் முகத்துக்கு முன்பாக தூக்கியெறிந்தனர். இருப்பினும், இந்தப் பதவிப்பறிப்பு மசோதாவை ஒரு கூட்டுக் குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.

இந்த நிலையில்தான், பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அவ்வப்போது கட்சி மற்றும் கட்சியினரின் நிலைப்பாட்டுக்கு மாறாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவரிடம் `பாஜகவில் இணையப் போகிறீர்களா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், அதனை அவர் முற்றிலுமாக மறுத்தார்.

இதையும் படிக்க: அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு! அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!

Summary

Shashi Tharoor Differs With Congress Again On 'Bill To Remove PM, Chief Ministers'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com