
மிசோரமில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மிசோரமில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிசோரமின் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறை ஆகியவற்றுடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஐஸ்வால்-சாம்பாய் சாலையில் வியாழக்கிழமை மாலை வாகனங்களை வழிமறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த நான்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஐஸ்வாலில் உள்ள கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் 50 கிலோ மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் மற்றும் மூன்று சோப்புப் பெட்டிகளில் ஹெராயின் மீட்கப்பட்டன.
இவற்றின் மதிப்பு ரூ.75.82 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ்வாலில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் இந்தப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.