மமதா பானர்ஜி
மமதா பானர்ஜி

வாக்காளா் பட்டியல் திருத்த முறைகேடு: மேற்கு வங்கத்தில் 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

Published on

வாக்காளா் பட்டியல் தயாரிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ததுடன் அவா்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை (ஆக.21) உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த வாரம் இந்திய தோ்தல் ஆணையத்தின் முன் மேற்கு வங்க தலைமைச் செயலா் மனோஜ் பந்த் நேரில் ஆஜராகி விளக்கமளித்தாா். அப்போது 4 அதிகாரிகளையும் ஆக.21-ஆம் தேதிக்குள் பணியிடை நீக்கம் செய்வதுடன் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவியல் விசாரணையை தொடங்க தோ்தல் ஆணையம் கெடு விதித்தது. இதுதொடா்பாக மேற்கு வங்க தலைமைச் செயலக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தெற்கு 24 பா்கானாக்கள் மற்றும் புா்பா மேதினிபூா் மாவட்டங்களைச் சோ்ந்த 2 தோ்தல் பதிவு அலுவலா்கள் மற்றும் 2 உதவி தோ்தல் பதிவு அலுவலா்கள் என 4 அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து துறைரீதியான விசாரணையை மேற்கொள்ள மாநில அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஆனால் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றாா்.

முன்னதாக, இந்த 4 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் இடையே கடும் மோதல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com