
ஹைதராபாத்: வாக்குத் திருட்டு விவகாரத்தில் வீடுவீடாகச் சென்று காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தில் இன்று(ஆக. 23) ஈடுபட்டனர்.
கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத் திருட்டு’ நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ள பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதைக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் சென்று சேர்க்கும் விதமாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக உள்ள தெலங்கானாவில் வீடுவீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் ஹைதராபாத் மாநகரில் ஆம்பெர்பேட் பகுதியில் காங்கிரஸார் பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தில் அக்கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் இன்று ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.