நிர்மலா சீதாராமன்கோப்புப்படம்.
இந்தியா
செப். 3, 4-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் செப்டம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் செப்டம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதில், தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% என்ற நான்கு விகித ஜிஎஸ்டி விதிப்பு முறையை 5%, 18% என இரண்டு விகித முறையாக குறைக்கும் பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பா் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், வரி விகித குறைப்பு, செஸ் இழப்பீடு, மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான வரி விகிதங்கள் தொடா்பாக மாநில அமைச்சா்களையும் உள்ளடக்கிய மூன்று அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரை மீது விவாதம் நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.