
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியா, பிரயாக்ராஜ் நகரங்களைத் தொடர்ந்து அலிகார் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஒரு சில நாள்களுக்கு முன்புதான், ஷாஜகான்பூரில் உள்ள ஜலாலாபாத், பரசுராம்புரி என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஹிந்து கௌரவ் நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத், ஃபைசாபாத் நகரம் எவ்வாறு அயோத்தியா என்றும், அலகாபாத் எவ்வாறு பிரயாக்ராஜ் என்றும் மாற்றப்பட்டதோ, அவ்வாறு அலிகார் நகரின் பெயர் ஹரிகர் என்று மாற்றப்பட வேண்டும் என்றார்.
மேலும், உடனடியாக செயல்பட்டு அலிகார் நகரின் பெயரை ஹரிகர் என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல், மிக முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. அதில், அயோத்தியா, பிரயாக்ராஜ் பெயர்மாற்றம் குறிப்பிடத்தக்க விஷயமாக அமைந்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.