சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்து: பலி 3ஆக உயர்வு

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

News image

விபத்துக்குள்ளான டேங்கர் லாரி.

Updated On :23 ஆகஸ்ட் 2025, 2:32 pm

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், மண்டியாலா அடா அருகே ஹோஷியார்பூர்-ஜலந்தர் சாலையில் எல்பிஜி டேங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மோதியது. இதில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் இரண்டு பேர் பலியாகினர்.

அவர்கள் டேங்கர் லாரி ஓட்டுநர் சுக்ஜீத் சிங் மற்றும் மண்டியாலா கிராமத்தைச் சேர்ந்த பால்வந்த் ராய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 21 பேர் காயமடைந்தனர். தீ வேகமாக பரவியதால் அருகிலுள்ள சுமார் 15 கடைகள் மற்றும் 4 முதல் 5 வீடுகள் தீக்கிரையாகின. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன.

படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து பஞ்சாப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படுகாயமடைந்த தர்மிந்தர் வர்மா (28), அமிர்தசரசில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட இருந்தபோது வழியிலேயே பலியானார்.

இதையடுத்து இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் முதல்வர் பகவந்த் மான் சனிக்கிழமை அறிவித்தார்.

Summary

The death toll in the LPG tanker fire incident rose to three after one more person succumbed to burn injuries, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.