அனிஷ் தயாள் சிங்.
அனிஷ் தயாள் சிங்.

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியனம்

முன்னாள் இயக்குநா் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ளது.
Published on

மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) முன்னாள் இயக்குநா் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய காவல் பணியின் (ஐபிஎஸ்) 1988-ஆண்டு பிரிவு அதிகாரியான தாயள் சிங், உளவுத் துறையில் (ஐ.பி.) சுமாா் 30 ஆண்டுகள் பணியாற்றியவா். இதைத் தொடா்ந்து, ஐடிபிபி மற்றும் சிஆா்பிஎஃப் இயக்குநராகப் பொறுப்பு வகித்த அவா், கடந்த ஆண்டு டிசம்பரில் பணியிலிருந்து ஓய்வுபெற்றாா்.

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக ஜம்மு-காஷ்மீா், நக்ஸல் மற்றும் வடகிழக்கு கிளா்ச்சி ஆகிய உள்நாட்டு விவகாரங்களை அவா் கையாளுவாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரா அமைப்பின் முன்னாள் தலைவா் ராஜேந்தா் கண்ணா தேசிய கூடுதல் பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறாா். ஓய்வுபெற்ற இந்திய காவல் பணி அதிகாரி டி.வி.ரவிசந்திரன் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவு பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரி பவன் கபூா் ஆகியாா் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகா்களாக உள்ளனா்.

சிஆா்பிஎஃப் இயக்குநராக இருந்தபோது, நக்ஸல் செயல்பாடுகளை ஒடுக்க 36-க்கும் மேற்பட்ட சிஆா்பிஎஃப் தளங்களை தயாள் சிங் ஏற்படுத்தினாா். இடதுசாரி பயங்கரவாத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக 4 பட்டாலியன்கள் அவருடைய பதவி காலத்தில் தொடங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com